நெருங்கும் தீபாவளி: குஷியுடன் ஷாப்பிங் செய்யும் மதுரை மக்கள்! - MADURAI DIWALI PURCHASE

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 18, 2025 at 9:01 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மதுரை:  தீபாவளி பண்டிகையை நெருங்குவதை முன்னிட்டு மதுரையின் முக்கிய கடை விதிகளில் பொதுமக்கள் கூட்டம் முன் எப்போதும் இல்லாத அளவில் நிரம்பி வழிகிறது. 

தமிழகம் முழுவதும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக மதுரை விளக்குத்தூண், பத்துத்தூண், மஞ்சணக்காரத்தெரு, காமராஜர் சாலை, கீழவாசல், பழங்காநத்தம் புறவழிச்சாலை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளிலும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி ஷாப்பிங் செய்து வருகின்றனர்.

பொதுவாக தீபாவளிக்கு முந்தைய நாள் தான் மதுரையின் நகர பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், இந்த ஆண்டு தீபாவளி வார விடுமுறையை தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் கூடுதல் நேரம் செலவளித்து தங்களுக்கு தேவையான அனைத்தையும் தீபாவளி ஆஃபரில் வாங்குவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனால், மதுரையில் தீபாவளி விற்பனை அமோகமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பிற்காக 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாசி வீதிகள் மற்றும் விளக்குத்தூண் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு அறிவிப்புகளையும் ஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் வழங்கி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details