பத்தலப்பள்ளி மலைப்பாதையில் 40 டன் பாறைக்கற்களுடன் லாரி பழுது: போக்குவரத்து கடும் பாதிப்பு
🎬 Watch Now: Feature Video

Published : August 31, 2026 at 10:21 AM IST
வேலூர்: தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பத்தலப்பள்ளி மலைப்பாதையில் 40 டன் எடை கொண்ட பாறைக்கற்களை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி பழுதாகி சாலையின் நடுவே நின்றதால், அவ்வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் கே.ஜி.எப் பகுதியை இணைக்கும் முக்கிய மலைப்பாதையாக பத்தலப்பள்ளி மலைப்பாதை உள்ளது. சுமார் ஏழு வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஏராளமான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், கே.ஜி.எப் பகுதியில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு பாறைக்கற்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த டாரஸ் லாரி, சுமார் 40 டன் எடை கொண்ட பாறைக்கற்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி, பத்தலப்பள்ளி மலைப்பாதையின் 5-வது வளைவு பகுதியில் திடீரென பழுதாகி நின்றது.
மலைப்பாதையின் நடுவே லாரி நின்றதால், இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.