திம்பம் 25-வது கொண்டை ஊசி வளைவில் 'உலா' வந்த சிறுத்தை - HAIRPIN BEND

🎬 Watch Now: Feature Video

thumbnail
திம்பம் 25-வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 6, 2026 at 2:30 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ஈரோடு: திம்பம் 25-வது கொண்டை ஊசி வளைவில் தென்பட்ட சிறுத்தையை ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்தனர்.

தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. 

இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு காரில் புறப்பட்ட 4 பேர், இன்று அதிகாலை திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். திம்பம் 25-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது சிறுத்தை தென்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

காரை மெதுவாக இயக்கி போது காரில் இருந்தவர்கள் சிறுத்தையை வீடியோ எடுத்தனர். காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தால் எரிச்சல் அடைந்த சிறுத்தை, சாலையை கடக்காமல் மீண்டும் காட்டுக்குள் சென்றது. 

இதற்கிடையே, சிறுத்தையை வீடியோ எடுத்து வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் குறித்து வனத்துறை விசாரித்து வருகிறது. இரவு நேரத்தில் சிறுத்தை, யானை, புலி போன்ற விலங்குகள் இரை தேடி செல்லும் போது வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும், சாலையில் கீழே இறங்குக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1455 சதுர கிமீ பரப்பளவு கொண்ட வனப்பகுதியாகும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மத்தியில் மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் அடர்ந்த காடாக இருப்பதால் வன விலங்குகள் சாலையோரம் உலாவுவதை சாதாரணமாக பார்க்க முடியும்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

Tamil Nadu's geography is as such it shares a coastal border with India’s neighbour Sri Lanka. Its political discourse is unique. ETV Bharat Tamil Nadu has a dedicated bureau in the capital and a batch of journalists covering the rest of the state. It brings you stories which matter to the region and from the state's perspective. Its coverage is not limited to the latest happenings but also will include unique and extraordinary stories from across the country and elsewhere from the globe as well....view details