முள்படுக்கையில் நடனமாடி பெண் சாமியார் அருள்வாக்கு - SIVAGANGAI MUTHU MARIAMMAN TEMPLE
🎬 Watch Now: Feature Video

Published : January 5, 2026 at 1:00 PM IST
சிவகங்கை: கோயில் மண்டல பூஜை விழாவில் பெண் சாமியார் முள்படுக்கையில் நடனமாடி அருள்வாக்கு கூறிய சம்பவம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
லாடனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில், 49 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், நேற்று விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்புத் தீபாராதனைகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து, கோயில் முன்பு உள்ள திடலில் உடைமுள், இலந்தை முள், மற்றும் கற்றாழை முள் உள்ளிட்ட பல்வேறு வகையான முற்களைக் கொண்டு சுமார் 7 அடி உயரத்திற்குப் பிரம்மாண்டமான முள்படுக்கை அமைக்கப்பட்டிருந்தது.
அதில் நாகராணி அம்மையார் என்ற பெண் சாமியார், முள்படுக்கையில் ஏறி அமர்ந்தும், நின்றவாறும், படுத்துக் கொண்டும் ஆக்ரோஷமாக நடனமாடி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். கூர்மையான முற்களின் மீது நின்று அவர் செய்த செயல் பக்தர்களைப் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
நிகழ்வின் போது மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் கும்மியடித்தும், பக்திப் பாடல்களைப் பாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் திருவிழாவில் லாடனேந்தல் கிராமத்தைச் சுற்றியுள்ள பொதுமக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.