திருகார்த்திகையை முன்னிட்டு சபரிமலையில் தீபம் ஏற்றம் - தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் - SABARIMALA THIRUKARTHIGAI

🎬 Watch Now: Feature Video

thumbnail
சபரிமலை திருகார்த்திகை தீபம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 5, 2025 at 7:50 AM IST

1 Min Read
Choose ETV Bharat

தேனி: திருகார்த்திகை நட்சத்திர தினத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சபரிமலையில் நேற்று (டிச.4) கார்த்திகை தீபம் ஏற்றபட்டது.

உலகளவில் பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள விருச்சிக மாதத்தின் திருகார்த்திகையை முன்னிட்டு சபரிமலையில் நேற்று (டிச.4) தீபம் ஏற்றப்பட்டது. மாலை தீபாராதனைக்கு முன், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, கார்த்திகை தீபம் ஏற்றினார். தொடர்ந்து கல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டதும் சபரிமலை சன்னதியில் ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இந்நிகழ்வை முன்னிட்டு சன்னிதானத்தில் உள்ள அனைத்து சாமி சிலைகள் முன்பும் தீபங்கள் ஏற்றப்பட்டன. மேலும் சபரிமலை மாளிகைப்புரத்து அம்மன் கோயிலிலும் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் விரைவு அதிரடிப்படை (RAF) வீரர்களும் சபரிமலை சன்னிதானத்தின் பதினெட்டாம்படி அருகே சிவலிங்க வடிவில் பூக்கோலமிட்டு கார்த்திகை தீபம் ஏற்றி மகிழ்ந்தனர். நேற்று சுற்றிலும் ஏற்றப்பட்ட தீபங்களின் ஒளியால் ஜொலித்த சபரிமலையை பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details