திரைத்துறையில் இருந்து முதல்வர் - கமல்ஹாசன் பெருமிதம் - KAMAL HAASAN ON VIJAY
🎬 Watch Now: Feature Video

Published : May 13, 2026 at 6:50 PM IST
சென்னை: எங்கள் துறையில் இருந்து ஒருவர் முதலமைச்சராக வந்திருப்பது பெருமையாக உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதிய அரசு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, வாழ்த்துகள் என பதிலளித்தார்.
தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. நீண்ட நாட்களாக பேசிக் கொண்டிருந்தது, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. வாழ்த்துகள்” என்றார்.
திரைத்துறையில் இருந்து ஒருவர் முதலமைச்சராக வந்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “விஜய்யை ஒரு திரைப்பட நடிகராக மட்டும் பார்க்கக் கூடாது. வேறு கடமைகளை பார்க்க வேண்டும். எந்த துறையில் இருந்து வேண்டுமானாலும் முதலமைச்சராகலாம். எங்கள் துறையில் இருந்து ஒருவர் முதலமைச்சாரக வந்தது பெருமையாக உள்ளது” என பதிலளித்தார்.
ஊழல் கட்சி என விமர்சித்த அதிமுகவிடமே விஜய் ஆதரவு கேட்டுள்ளாரே? என்ற கேள்விக்கு, அதிமுகவில் உள்ள ஒரு பிரிவிடம் தானே ஆதரவு கேட்டுள்ளார்” இவ்வாறு கமல் கூறினார்.