கூண்டில் சிக்கிய கரடி; பொதுமக்கள் நிம்மதி - FOREST DEPARTMENT

🎬 Watch Now: Feature Video

thumbnail
சிக்கிய கரடியை பாதுகாப்பாக மீண்டும் வனப்பகுதியிலேய் விடப்பட்ட காட்சி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 12, 2026 at 3:50 PM IST

1 Min Read
Choose ETV Bharat

நெல்லை: மணிமுத்தாறு அருகே மக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகள், சிறுத்தைகள், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இவை அவ்வபோது மலையடிவார பகுதியான கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, பாபநாசம் மற்றும் விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவது வழக்கம். குறிப்பாக, கரடிகள் அடிக்கடி குடியிருப்பு பகுதியில் வந்து செல்வதோடு, அங்குள்ள மனிதர்களை தாக்கும் சம்பவமும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆலடியூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கரடிகள் நடமாட்டம் இருப்பதாக சமீபத்தில் வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கரடிகள் ஊருக்குள் வந்து செல்லும் இடங்ககளைக் கண்டறிந்து, அவற்றை பிடிக்க வனத்துறை கூண்டுகளை வைத்தது. இதன் தொடர்ச்சியாக, விக்கிரமசிங்கபுரம் அருகே சங்கரபாண்டியபுரம் பகுதியில் சமீபத்தில் வெவ்வேறு நாட்களில் இரண்டு கரடிகள் கூண்டில் சிக்கின.

இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு - திமுக எம்பி ஆ.ராசா மீது பெரம்பலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

இந்த நிலையில், மணிமுத்தாறு அருகே ஆலடியூர் அடுத்த கோரையார்குளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் இன்று (ஜூலை 12) அதிகாலை மூன்று வயதுடைய மற்றுமொரு கரடி சிக்கியது. பிடிபட்ட இந்த கரடிக்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் மேற்பார்வையில் வன கால்நடை மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை நடத்தினர்.

அது ஆரோக்கியமாக இருப்பது உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து அந்த கரடியை பாபநாசம் வனச்சரக களப்பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட கொடமாடி அடர்வனப் பகுதியில் விடுவித்தனர். ஒரே வாரத்தில் மூன்று கரடிகள் சிக்கியதால் அப்பகுதி மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.