"சொல்லுங்கண்ணே, சொல்லுங்க" - நடிகர் இமான் அண்ணாச்சி பிரச்சாரம் - TAMIL NADU ASSEMBLY ELECTION 2026

🎬 Watch Now: Feature Video

thumbnail
நடிகர் இமான் அண்ணாச்சி பிரச்சாரம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 20, 2026 at 2:46 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகர் இமான் அண்ணாச்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், தற்போதைய வேட்பாளருமான ஊர்வசி அமிர்தராஜ் சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளை, அரசூர், பூச்சிக்காடு, கலியன்விலை, தச்சன்விலை, கடக்குளம், செட்டியார் பண்ணை, பள்ளம்தட்டு, கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது அவருக்கு ஆதரவாக திரைப்பட காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் தனக்கே உரித்தான பாணியில் "சொல்லுங்கண்ணே, சொல்லுங்க" என்று வாக்காளர்களிடம் கூறியபடி பிரச்சாரம் செய்தார். 

அப்போது அந்த வழியாக பார்வர்டு பிளாக் கட்சியினர் தங்களது சின்னமான சிங்கம் உருவ பொம்மையுடன் சென்றனர். உடனே நடிகர் இமான் அண்ணாச்சி அங்கு கூடியிருந்த மக்களிடம் சிங்கத்தை அனைவரும் வேடிக்கை பார்த்து விட்டு, காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நாளை மாலை முடிவடைவதால், அரசியல் தலைவர்கள் அனைவரும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details