பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம் - PONGAL FESTIVAL

🎬 Watch Now: Feature Video

thumbnail
ஹெலிகாப்டர் சாகச பயணம் தொடக்கம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 12, 2026 at 6:14 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: கோவளத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா பயணத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  

பொங்கல் விடுமுறையில் பொதுமக்கள் ஹெலிகாப்டரில் சுற்றுலா மேற்கொள்ளும் வகையில் இன்று முதல் 7 நாட்களுக்கு கோவளத்தில் ஹெலிகாப்படர் சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு ரூ.6000 வீதம் என ஐந்து நிமிடத்தில், கோவளம் கிழக்கு கடற்கரை சாலை துவங்கி, ஓஎம்ஆர் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களுக்கு ஹெலிகாப்டர் சென்று திரும்பும் வகையில் இந்த சுற்றுலா பயணம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹலிகாப்டர் சுற்றுலா பயணத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஹெலிகாப்டரில் சென்னையின் அழகை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். முதல் நாளிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், தற்போது மத்திய அரசிடம் அனுமதி பெற்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details