கடும் பனிமூட்டத்தால் திம்பம் மலைப்பதையில் போக்குவரத்து நெரிசல் - MIST ON THE THIMBAM MOUNTAIN
🎬 Watch Now: Feature Video

Published : January 11, 2026 at 2:36 PM IST
ஈரோடு: திம்பம் மலைப்பகுதியில் பகல் நேரத்திலும் பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன.
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பகல் நேரத்திலும் திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் மலைப்பாதையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஓட்டுநர்கள் வாகனங்களை மித வேகத்தில் இயக்கினர். இதன் காரணமாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையின் வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் ஒவ்வொரு வளைவையும் மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திம்பம் மலை பாதையில் நிலவிய பனிமூட்டம் காரணமாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.