தஞ்சை பெரிய கோயிலில் சினிமா பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்த சிறுமிகள் - வெடித்த சர்ச்சை - THANJAVUR BIG TEMPLE REELS ISSUE
🎬 Watch Now: Feature Video

Published : May 14, 2026 at 1:40 PM IST
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிறுமிகள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி, அதை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்நிலையில், பெரிய கோயிலின் பிரகாரத்தில் விமான கோபுரத்தின் பின்புறம், மூன்று சிறுமிகள் திரைப்பட பாடலுக்கு நடனமாடும் வீடியோவை ரீல்ஸாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பும் பெரிய கோயில் வளாகத்தில் சிலர் நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
எனினும், இந்த சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் கோயில் வளாகத்தில் சினிமா பாடலுக்கு நடனமாடி சிறுமிகள் வீடியோ வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. எனவே அறநிலையத்துறை, தொல்லியல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதனை உன்னிப்பாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பக்தர்களும் வலியுறுத்தி உள்ளனர்..