இந்தோனேசியாவிலிருந்து உடன்குடிக்கு வந்த 20,000 டன் நிலக்கரி - UDANGUDI THERMAL POWER PLANT

🎬 Watch Now: Feature Video

thumbnail
உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு இந்தோனேசியாவிலிருந்து 20,000 டன் நிலக்கரி வருகை (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 23, 2026 at 5:35 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு முதன்முறையாக இந்தோனேசியாவிலிருந்து 20,000 டன் நிலக்கரி கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் தலா 800 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 2023 ஆண் ஆண்டு, 800 மெகாவாட்டுக்கு பதிலாக 680 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது.

அதிக அளவிலான எரிபொருள் தேவைப்படுவதால், இறக்குமதி வசதிக்காக அனல் மின் நிலையக் கடற்கரையையொட்டி பிரத்யேகச் சிறு துறைமுகம் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது அனல்மின் நிலையத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான நிலக்கரி இறக்குமதி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதன் முதற்கட்டமாக, இந்தோனேசியாவிலிருந்து தனியார் சரக்குக் கப்பல் மூலம் 20,000 டன் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து கடல் வழியாக உடன்குடி அனல் மின் நிலையத்திற்கென அமைக்கப்பட்ட பிரத்யேகச் சிறு துறைமுகத்திற்கு நிலக்கரி கொண்டு வரப்பட்டது. கப்பலிலிருந்து நிலக்கரியை மின் நிலையத்திற்கு தடையின்றி கொண்டு செல்லும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details