ஜவுளி கடையில் ரூ.2 கோடி துணிகள் நனைந்து சேதம் - TEXTILE SHOP FULLOF WATER INSIDE

🎬 Watch Now: Feature Video

thumbnail
ஜவுளி கடையில் ரூ. 2 கோடி மதிப்பிலான துணிகள் நீரில் நனைந்து சேதம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 10, 2026 at 5:17 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தேனி: மோட்டாரை நிறுத்தாமல் சென்றதால் இரவு முழுவதும் தண்ணீர் வடிந்து ஜவுளி கடையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் நனைந்து சேதமானது.

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பிரபல நகைக்கடை மற்றும் அதன் அருகில் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. இரண்டு கடைகளுக்கும் மேல் மாடியில் ஒரே டேங்க் மூலம் நீர் தேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு நகைக்கடையின் ஊழியர்கள் மேல் தளத்தில் உள்ள டேங்கில் நீர் நிரப்புவதற்காக மோட்டார் போட்டு விட்டு அதனை நிறுத்தாமல் மறந்து விட்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை ஜவுளிக்கடையினை திறப்பதற்காக அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வருகை தந்து கடையின் ஷட்டரை திறக்கும் போது தண்ணீர் வெள்ளம் போல் வெளியேறிக் கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜவுளி கடையின் உரிமையாளர் கடையின் மேல் மாடியில் சென்று பார்த்த போது மோட்டாரை நிறுத்தாமல் சென்றதால் தண்ணீர் இரு கடைகளிலும் வெள்ளம் போல் தேங்கி நின்றுள்ளது என கண்டறிந்துள்ளனர்.

இதனை அடுத்து அருகே உள்ள நகை கடையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களும் கடைக்குள் சென்று பார்த்த போது அவர்கள் கடையிலும் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. இதில் ஜவுளி கடையில் இருந்த சுமார் 2 கோடி மதிப்பிலான துணிகள் நீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details