விஜய் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் - பருந்துப் பார்வை காட்சி - TVK MEET
🎬 Watch Now: Feature Video

Published : December 15, 2025 at 7:21 PM IST
ஈரோடு: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும் 18-ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில், ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள சரளை பகுதியில் வரும் 18-ந் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக அந்த பகுதியில் 26 ஏக்கர் நிலத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சாரத்தில் ஈரோடு மாவட்டம் மட்டும் இன்றி கொங்கு மண்டலத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்சார பொதுக் கூட்டத்தில் தவெக கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பார்ப்பதற்கு தனி தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பொதுக் கூட்ட மேடையை சுற்றியும் தமிழக வெற்றி கழகத்தின் கொடி கம்பங்கள் நடப்பட்டு மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளராகவும் கொங்கு மண்டல பொறுப்பாளராகவும் உள்ள செங்கோட்டையன் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் பார்வையிட்டு அதனை துரிதப்படுத்தி வருகிறார்.