திராவிட பொங்கல் கபடி போட்டி - PONGAL KABADI

🎬 Watch Now: Feature Video

thumbnail
கபடி போட்டியை தொடங்கி வைத்த செல்வம் எம்பி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 8:35 PM IST

1 Min Read
Choose ETV Bharat

காஞ்சிபுரம்: திமுக சார்பில் திராவிட பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் கிராமங்கள்தோறும் கபடி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் அடுத்த வாரம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போதே கிராமப் பகுதிகளில் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கி விட்டன. மேலும், இந்த ஆண்டு வரும் பொங்கல் திராவிட பொங்கல் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து, திமுக சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள சமத்துவபுரத்தில் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மின்னொளியில் கபடி போட்டி நடைபெற்றது.

இதில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கபடி குழுக்களின் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். கபடி போட்டியை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.10,000, இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ.7000 மற்றும் மூன்றாம் இடம் பிடித்த கபடி குழுவினருக்கு ரூ.5000 பரிசுத் தொகையை எம்பி செல்வம் வழங்கினார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details