மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறப்பு முகாமில் தகராறு - DISPUTE AT SPECIAL CAMP

🎬 Watch Now: Feature Video

thumbnail
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தகராறு (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 23, 2026 at 5:32 PM IST

1 Min Read
Choose ETV Bharat

காஞ்சிபுரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டதில் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் இருந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறப்பு வாக்காளர் திருத்தம் மேற்கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இன்று வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் இன்னும் 10 நாட்களில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அதற்குள் தான் பணியிட மாற்றம் செய்யப்படுவேன் எனவும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

மேலும் தான் பணியாற்றிய காலத்தில் ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் உங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

அதன்படி ஒவ்வொரு கட்சியினரும் தெரிவித்து வந்த நிலையில் திடீரென பாஜக மாவட்ட செயலாளர் ஜெகதீசன் பேசிக் கொண்டிருந்தபோது பிற கட்சியினர் குறிப்பிட்டு ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். 

ABOUT THE AUTHOR

...view details