குடிநீர் தொட்டியை நீங்க கழுவுறீங்களா அல்லது நான் கழுவட்டுமா? - நகராட்சி கமிஷனுருடன் எம்எல்ஏ வாக்குவாதம் - WATER PURIFIER INAUGURATION

🎬 Watch Now: Feature Video

thumbnail
நகராட்சி கமிஷனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தருமபுரி எம்எல்ஏ (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 12, 2026 at 6:31 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தருமபுரி: குடிநீர் தொட்டியை நீங்க கழுவுறீங்களா அல்லது நான் கழுவட்டுமா? என தருமபுரி நகராட்சி ஆணையருக்கு, எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் போன் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தருமபுரி அன்னசாரகம் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அங்குவந்த பொதுமக்கள் குடிநீர் சுத்திகரிப்புக்கு வைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படாமல் பூச்சி, புழு இருப்பதாக புகார் செய்தனர்.  

உடனடியாக தருமபுரி நகராட்சி ஆணையாளர் சேகரை தொலைபேசியில் தொடர்புகொண்ட வெங்கடேஸ்வரன், “ஏற்கனவே குடிநீர்த்தொட்டியை சுத்தம் செய்ய உங்களிடம் சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது வரை சுத்தம் செய்யவில்லை. நீங்கள் சுத்தம் செய்கிறீர்களா அல்லது நான் சுத்தம் செய்யட்டுமா?” என்று காட்டமாக பேசினார். தொடர்ந்து அரைமணி நேரம் அவர்களுக்கு கெடு விதித்ததோடு, அதிகாரிகள் வரும்வரை அங்குதான் இருப்பேன் என்று கூறினார்.  

சிறிது நேரத்திற்குள் அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியை தொடங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details