புலிப்பாணி ஆசிரமத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு - JAPAN DEVOTEES VISIT PULIPANI
🎬 Watch Now: Feature Video

Published : February 26, 2026 at 1:16 PM IST
திண்டுக்கல்: உலக நன்மை வேண்டி பழனி மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு யாகம் மற்றும் பால் குடம் எடுத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் வழிபட்டனர்.
பழனி மலை அடிவாரத்தில் சித்தர் புலிப்பாணி ஜீவசமாதியில் உலக நலன் வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சித்தர் அகத்தியர், போகர், புலிப்பாணி, உள்ளிட்ட 18 சித்தர்கள் பூஜை நடைபெற்றது. சித்தர் போகர் மற்றும் புலிப்பாணி எழுதிய ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகள் பயன்படுத்தி வேத மந்திரம் முழங்க யாகம் நடைபெற்றது.
பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள், ஜப்பானிய தொழிலதிபர் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஜப்பான் நாட்டில் இருந்து வந்திருந்த வெளிநாட்டினவர் தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து கலந்து கொண்டனர். யாகத்தைத் தொடர்ந்து பால் குடம் எடுத்து திருஆவின்ன்குடி கோயிலில் அபிசேகம் செய்து வழிபட்டனர். இதில் ஏராளனமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.