மாற்றுத்திறனாளியுடன் துணை முதலமைச்சர் 'செல்ஃபி' - DEPTY CM

🎬 Watch Now: Feature Video

thumbnail
நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 14, 2026 at 1:48 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் இன்று நடைபெற்றது. 

இதில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, முடிவுற்ற திட்ட பணிகளான தாட்கோ வகுப்பறை மற்றும் அறிவுசார் மைய கட்டடங்கள், தொழிலாளர் நலத்துறை சார்பில் உழைப்பாளர் நலக் கூடம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடங்களை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட 16 துறைகளின் சார்பில் 4949 பயனாளிகளுக்கு சுமார் 104.14 கோடி ரூபாய் மதிப்பில் நல திட்ட ‌ வழங்கினார். அப்பொழுது மாற்றுத்திறனாளி ஒருவர், துணை முதல்வருடன் உற்சாக செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரநிதிகள், அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details