ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு நவதானியம் அலங்காரம் - THANJAI BIG TEMPLE

🎬 Watch Now: Feature Video

thumbnail
நவதானியத்தால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மஹா வாராஹி அம்மனின் வீடியோ (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 19, 2026 at 7:30 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு நவதானியம் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீபெருவுடையார் ஆலயத்தில் தனி சன்னதியில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் 7-ஆவது நாளாக இன்று (ஜூலை 19) வாராஹி அம்மனுக்கு நவதானியங்களால் (நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு ஆகியவற்றால்) அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், நந்தி மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.

மேலும், பக்தர்களின் பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அத்துடன், பக்தர்கள் சிரமமின்றி வழிபட்டு செல்வதற்கு ஏதுவான ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் முன்கூட்டியே செய்திருந்தது.