சைக்கிள் தினம் கொண்டாட்டம் - CYCLE RALLY OCCASION OF CYCLE DAY
🎬 Watch Now: Feature Video

Published : June 3, 2026 at 11:30 AM IST
தருமபுரி: சர்வதேச சைக்கிள் தினத்தை ஒட்டி இயற்கையை பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி நடத்தினர்.
தருமபுரியில் சர்வதேச சைக்கிள் தினத்தை ஒட்டி, அழிந்து வரும் இயற்கையை பாதுகாக்கும் வகையிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதாலும், பொதுமக்கள் அதிகமாக சைக்கிளை பயன்படுத்த வேண்டும். இதனால் உடல் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள், சிறுவர்கள் சைக்கிள் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.
இந்த சைக்கிள் பேரணி பொதுமக்கள் அதிகம் நடமாடக் கூடிய இடங்களான, இலக்கியம்பட்டி, செந்தில் நகர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நெசவாளர் காலனி, நேதாஜி பைபாஸ் சாலை வழியாக நான்கு ரோடு சந்திப்பில் நிறைவு பெற்றது. இந்த சைக்கிள் பேரணியில் மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர், தன்னார்வலர்கள் சிறுவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.