வருடத்தின் துவக்கத்திலேயே முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை - SOTHUPPARAI DAM WATER INCREASE
🎬 Watch Now: Feature Video

Published : January 4, 2026 at 3:22 PM IST
தேனி: தொடர் மழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிறைந்துள்ளது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் கடந்த 20 நாட்களாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் 123 அடியாக குறைந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து வர தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் 123 அடியிலிருந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. இதனால் தற்போது அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு தற்போது 100 மில்லியன் கன அடியாக உள்ளது.
சோத்துப்பாறை அணை வருடத்தின் தொடக்கத்திலேயே அணை முழுகொள்ளவை எட்டியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு நல்ல முறையில் விவசாயம் இருக்கும் என்று நம்புவதாகவும் அப்பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.