சாலையில் தறிகெட்டு ஓடிய கார்; தூக்கி வீசப்பட்ட பெண் - பதைபதைக்க வைக்கும் காட்சி - CAR ACCIDENT CCTV FOOTAGE

🎬 Watch Now: Feature Video

thumbnail
சாலையில் சென்ற பெண் மீது கார் மோதிய காட்சி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2026 at 11:07 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

வால்பாறை பகுதியில் வசித்து வருபவர் 65 வயதான காண்ட்ராக்டர் நாகராஜ். இவர் இன்று (மே 11) மதியம் தனது காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வால்பாறை தபால் நிலையம் அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காததால் தாறுமாறு ஓடியது.  

அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த கவிதா (வயது 47) என்ற பெண் மீது மோதியது. விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டார். பின்னர் கார் சாலையின் ஓரம் இருந்த வீட்டில் மோதி நின்றது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து படுகாயமடைந்த கவிதாவை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்திருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கவிதாவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விளக்கம்

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வால்பாறை காவல்துறையினர் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

ABOUT THE AUTHOR

Tamil Nadu's geography is as such it shares a coastal border with India’s neighbour Sri Lanka. Its political discourse is unique. ETV Bharat Tamil Nadu has a dedicated bureau in the capital and a batch of journalists covering the rest of the state. It brings you stories which matter to the region and from the state's perspective. Its coverage is not limited to the latest happenings but also will include unique and extraordinary stories from across the country and elsewhere from the globe as well....view details