பறவைகள் சரணாலயமான பக்கிங்ஹாம் கால்வாய் - BUCKINGHAM CANAL

🎬 Watch Now: Feature Video

thumbnail
பறவைகள் சரணாலயமாக மாறிய பக்கிங்காம் கால்வாய் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 1:35 PM IST

1 Min Read
Choose ETV Bharat

செங்கல்பட்டு: பக்கிங்ஹாம் கால்வாயில் நீர் வரத்து அதிகரித்ததால் இரை தேடி பறவைகள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த உப்பளம் பகுதியின் அருகே உள்ள பக்கிங்ஹாம் கால்வாய்-க்கு கடந்த சில மாதங்களாக பெய்து வந்த மழையால் நீர் வரத்து அதிகரித்தது. கால்வாய் நீர் தேங்கி ஒரு தீவு போல் காட்சி அளிக்கிறது. இதனால் கால்வாயில் உள்ள புழுக்கள், பூச்சிகள் மற்றும் மீன்களை சாப்பிடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் கூட்டம் கூட்டமாக பக்கிங்ஹாம் கால்வாய்க்கு வரத் தொடங்கியுள்ளன. 

இதனால் வெளிநாட்டு பறவைகளை கூட்டம் கூட்டமாக திரண்டதால், பக்கிங்ஹாம் கால்வாயை பார்ப்பதற்கு பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது. இத்தகைய வெளிநாட்டு பறவைகளை, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பார்த்து ரசித்தபடி செல்கின்றனர். பறவைகள் பார்ப்பதற்கு வண்ணமயமாகவும் அதன் செயல்கள் ரசிக்கும் படியாகவும் உள்ளதாகவும் பறவைகள் கூட்டமாக வானில் பறப்பதை பார்ப்பதற்கு இனிமையாக இருப்பதாகவும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். 

ABOUT THE AUTHOR

...view details