ஆணழகன் போட்டியில் அசத்திய சிறுவர், சிறுமிகள் - MALE BEAUTY PAGEANT
🎬 Watch Now: Feature Video

Published : March 9, 2026 at 9:42 AM IST
சென்னை: சென்னையில் நடைபெற்ற போட்டியில், சிறுவர், சிறுமியர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தி பார்ப்போரை வியக்க வைத்தனர்.
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சென்னை கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் மோகன் குமார் தலைமையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆணழகன் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. 15 பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது உடல் கட்டமைப்புகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
உடல் கட்டமைப்பு மூலம் ஆண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்திய நிலையில், சிறுவர்களுக்கான போட்டியும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். சிறுவர்கள் பிரிவில் போட்டியிட்டவர்களை தேர்வு செய்வதில் நடுவர்களுக்கே குழப்பம் ஏற்பட்டது.
எனவே, மேடை ஏறிய அனைத்து சிறுவர், சிறுமியர்களுக்கும் பதக்கங்கள், கோப்பைகள், சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும் அவர்களுடைய பெற்றோர்களையும் மேடையில் ஏற்றியதில் கூடியிருந்த அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். கோப்பை மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட சிறுவர்கள் அவரவருடைய குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.