இளம்பெண் வீட்டின் மீது பாட்டில் குண்டு வீச்சு; தலைமறைவானவர்களை பிடித்த தனிப்படை - BOTTLE BOMB THROWN AT WOMAN HOME

🎬 Watch Now: Feature Video

thumbnail
காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசப்பட்டதன் சிசிடிவி காட்சி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2026 at 7:30 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசிய சம்பவத்தில் தலைமறைவானவர்களை தேடி பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்துரை சேர்ந்த இளம்பெண், கல்லூரியில் படித்தபோது சென்னையை சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்ற இளைஞருடன் பழகியதாக கூறப்படுகிறது. கார்த்திக் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்ததால், இருவருக்கும் இடையே இருந்த பழக்கத்தில் முறிவு ஏற்பட்டது. இருப்பினும், தொடர்ந்து கார்த்திக் இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மே 24-ம் தேதி மாலை, கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் இணைந்து இருசக்கர வாகனங்களில் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று, மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி உள்ளார். இதில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், வீட்டின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, பெண்ணின் தந்தையையும் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். காவலர்கள் தேடுவதை அறிந்த 4 பேரும் தலைமறைவான நிலையில், அவர்களை தேடி பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

ABOUT THE AUTHOR

Tamil Nadu's geography is as such it shares a coastal border with India’s neighbour Sri Lanka. Its political discourse is unique. ETV Bharat Tamil Nadu has a dedicated bureau in the capital and a batch of journalists covering the rest of the state. It brings you stories which matter to the region and from the state's perspective. Its coverage is not limited to the latest happenings but also will include unique and extraordinary stories from across the country and elsewhere from the globe as well....view details