வேன் மோதி ஐயப்ப பக்தர்கள் இருவர் உயிரிழப்பு - IYAPPA DEVOTEES ACCIDENT DEATH
🎬 Watch Now: Feature Video

Published : January 3, 2026 at 10:49 AM IST
தேனி: சபரிமலைக்கு பாத யாத்திரையாக சென்ற ஐயப்ப பக்தர்கள் இருவர் மீது வேன் மோதி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேனியில் இருந்து நேற்று முன்தினம் பாத யாத்திரையாக நடந்து சென்றனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீலையம்பட்டி பகுதி அருகே அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து ஐயப்பன் பக்தர்களை ஏற்றிக் கொண்டு சபரிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் ஆண்டிபட்டியைச் சேர்ந்த குமார் (55), ராம்கி (36) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பந்தமாக வேனை ஓட்டி வந்த தினேஷ்குமார் (34) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த குமார் மற்றும் ராம்கி உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.