'வாழும் கலை அறக்கட்டளை' ஆண்டு விழாவில் சந்திரபாபு நாயுடு; பெங்களூருவில் இருந்து நேரலை காட்சிகள் - ART OF LIVING 45TH ANNIVERSARY
🎬 Watch Now: Feature Video

Published : May 20, 2026 at 6:50 PM IST
பெங்களூரு: வாழும் கலை அறக்கட்டளை ( The Art of Living Foundation) தமது 45-ம் ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவுக்கு அருகே உதய்புராவில் அமைந்துள்ள இந்த அறக்கட்டளையின் சர்வதேச ஆசிரமத்தில் சத்சங்கம் நிகழ்ச்சி இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் வாழும் கலை அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றுள்ளார். அதன் நேரலை காட்சிகளை இங்கு காணலாம்.
வாழும் கலை அறக்கட்டளை, கடந்த 1981-ம் ஆண்டு ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரால் நிறுவப்பட்டது. மன அழுத்தம் மற்றும் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட இந்த சர்வதேச அமைப்பு, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இன்று 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது.
மனஅமைதிக்கான பிரத்யேக யோகா, தியானம் மற்றும் 'சுதர்சன கிரியா' போன்ற சுவாசப் பயிற்சிகள் இந்த அறக்கட்டளையின் சார்பில் கற்றுத்தரப்படுகின்றன.
கிராமப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி, பெண்கள் மேம்பாடு போன்ற பல்வேறு சமூக நலப்பணிகளையும் 'வாழும் கலை அறக்கட்டளை' மேற்கொண்டு வருகிறது.