ஆனைமலை தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா - ANAMALAI DHARMARAJA DRAUPADI TEMPLE

🎬 Watch Now: Feature Video

thumbnail
ஆனைமலை தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 5, 2026 at 11:50 AM IST

1 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் 61 அடி நீளமுள்ள குண்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி வழிபாடு செய்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 16 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனை அடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று காலை 8 மணி அளவில் 61 அடி நீளமுள்ள குண்டத்தில் விரதம் இருந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் விரதம் இருந்த பக்தர்கள் 5 அடி முதல் 10 அடி வரை நீளமுள்ள வேல் அழகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details