தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து - FOOD DISTRIBUTION SANITATION WORKER
🎬 Watch Now: Feature Video

Published : May 2, 2026 at 1:30 PM IST
தஞ்சாவூர்: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று அசைவ விருந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் வருடம் முழுவதும் உழைத்து மாநகரை சுத்தப்படுத்தி பொழிவுடன் காத்து வரும் தஞ்சை மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பிரபல அசைவ ஹோட்டலில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.
மேலும், அவர்களின் வீட்டிற்கே சென்று சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களை வேன் வைத்து அழைத்து வரப்பட்டனர். ஹோட்டலில் அவர்களுக்கு சுடச்சுட பிரியாணி, சிக்கன் 65, முட்டை தோசை, இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, புரோட்டா, ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், ஐஸ்க்ரீம், இளநீர், பாயாசம் என தேவையானதை வாங்கி பசியாற ருசித்து சாப்பிட்டு ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு மகிழ்ந்தனர். இந்த செயல் தூய்மைப் பணியாளர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.