விஜய், அஜித் குறித்து பேசிய நடிகை தமன்னா - ACTRESS TAMANNAAH SPEECH

🎬 Watch Now: Feature Video

thumbnail
விஜய், அஜித் குறித்து பேசிய நடிகை தமன்னா (ETVBharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 14, 2026 at 4:06 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திருவள்ளூர்: நடனம் ஆடுவதில் நடிகர் விஜய், ஜூனியர் என்.டி.ஆர். தான் சிறந்தவர்கள் என்று நடிகை தமன்னா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 2026 அறிவியல் மற்றும் கலைத் திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நடிகை தமன்னா பேசினார். 

அப்போது அவர், "எனக்கு கல்லூரி கால அனுபவங்கள் இல்லை. தற்போது புருஷன் என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது, அதை பாதியிலேயே விட்டு விட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்" என்றார். 

மேலும், நான் முதன் முதலில் நடித்த கல்லூரி திரைப்படம் மிகவும் முக்கியமானது. அந்த கதை கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 

விஜய் பற்றிப் பேசும் போது, மிகவும் எளிமையான, மென்மையான மனிதர். நடனம் ஆடுவதில் அவரும், ஜூனியர் என்.டி.ஆர் தான் சிறந்தவர்கள் என்றார். அஜித் பற்றி கூறும் போது, வீரம் திரைப்பட படப்பிடிப்பு தளத்தில், அவர் தனக்கு இட்லி சுட்டுக் கொடுத்தார். அவர் மிகவும் நல்ல மனிதர், மென்மையானவர், நல்ல குடும்பஸ்தன் என புகழ்ந்து பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details