பாஜக சார்பில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையை தொடங்கி வைத்த நடிகை ரம்யா நம்பீசன் - ACTRESS RAMYA NAMBISHAN

🎬 Watch Now: Feature Video

thumbnail
பாஜக சார்பில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையை தொடங்கி வைத்த நடிகை ரம்யா நம்பீசன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 3:46 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: திருச்செந்தூரில் பாஜக சார்பில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையை நடிகை ரம்யா நம்பீசன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியை அடுத்துள்ள அடைக்கலாபுரம் சீனந்தோப்பு பகுதியில் பாஜக சார்பில் குபேர பூஜை திருவிழா நடந்தது. இதில் 4008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றன. பாஜக சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்காக ஆறுமுகநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், திடீரென மழை பெய்ததால் அங்கு விளக்கு பூஜைக்கு வந்த அனைத்து பெண்களும் குடையுடன் நின்றனர். இந்த விழாவை திரைப்பட நடிகை ரம்யா நம்பீசன் தொடங்கி வைப்பதாக இருந்தது. 

நிகழ்ச்சிக்கு முன்பாக மழை பெய்ததால் பெண்கள் அனைவரும் விளக்கு பூஜைக்கான பொருட்களை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். தொடர்ந்து விழா நிறைவு பெறுவதற்குள் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த கரும்பு, வாழை இலை அங்கிருந்து பொதுமக்கள் எடுத்து சென்றனர். மேலும், ஆறுமுகநேரி அருகே மெயின் ரோட்டில் ஓரமாக இந்த விளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

ABOUT THE AUTHOR

...view details