கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை விழா - DEIVYA DESAM SARANGAPANI TEMPLE
🎬 Watch Now: Feature Video

Published : April 22, 2026 at 5:10 PM IST
கும்பகோணம்: 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சித்திரைப்பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி சாமி கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இத்தளத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார். அவரது வேண்டுகோளின்படி உத்தானசாயி (சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலை) கோலத்தில் சாரங்கபாணிசுவாமி எனும் ஆராவமுதன் இங்கு அருள் பாலிக்கிறார். தாயார் கோமளவள்ளி ஹேமரிஷி தவம் செய்த தளம் அவர் பெயரால் விளங்கும் ஹேமபுஷ்கரணியில் தோன்றிய மகாலட்சுமியை (கோமளவள்ளி) பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக தேருடன் இத்தளத்திற்கு எழுந்தருளி மணம் புரிந்ததாக வரலாறு பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக தன்னுடைய ரதத்திலேயே இங்கு வந்ததால், எனவே கர்ப்பகிரகம் யானை, குதிரை பூட்டிய ரதத்துடன் கூடியதாக அமைந்துள்ளது. இதுபூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது.
எனவே இங்கு சொர்கவாசல் என்ற ஒன்று தனியாக இல்லை. பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலமாக சாரங்கபாணி திருக்கோயில் போற்றப்படுகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் எனும் தமிழ் பாடல்கள் தந்த பெருமைமிகு தளம்.
இக்கோயிலின் ராஜகோபுரம் 171 அடி உயரம் கொண்டது. இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல நடப்பாண்டிற்கான இவ்விழா இன்று (ஏப்ரல் 22) காலை உற்சவர் சாரங்கபாணிசுவாமி ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் தேசிகன் சன்னதியில் எழுந்தருள, நாதஸ்வர மேள, தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, கருடாழ்வார் சின்னம் வரையப் பெற்ற கொடிக்கு மலர் மாலை சாற்றி புனித கலச நீர் கலசங்களை ஸ்தாபித்து, விசேஷ பூஜைகள் செய்து, கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டு, கொடி மரத்திற்கும், சுவாமிகளுக்கும் ஆர்த்தி செய்யப்பட்டு தொடங்கியது.
கொடியேற்றத்தை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நான்காம் நாளான, 25-ம் தேதி சனிக்கிழமை இரவு, ஓலைச்சப்பரத்தில் தங்க கருட சேவையும், ஒன்பதாம் நாளான 30 -ம் தேதி வியாழக்கிழமை காலை சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திரை பெரிய தேரின் தேரோட்டமும் நடைபெற உள்ளது.