அவரைக்காய் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் உருவத்தை வரைந்த இளைஞர் - MK STALIN BIRTHDAY WISH
🎬 Watch Now: Feature Video

Published : March 1, 2026 at 1:08 PM IST
திருவண்ணாமலை: முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் ஒருவர் அவரைக்காய் பயன்படுத்தி முதல்வரின் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த ஓவியர் ஹரீஷ் பாபு, தனது திறமையால் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் என பலரின் உருவப்படங்களை பழமை வாய்ந்த இந்திய ஓவியக்கலை முறையில் வரைவதில் நிபுணத்துவம் பெற்றவர். குறிப்பாக, இவரது ஓவியங்கள் இயற்கைப் பொருட்களான அவரைக்காய், தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை பயன்படுத்தி உருவாக்கப்படுவதால், சுற்றுச்சூழல் நண்பர்கள் மற்றும் கலை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுபோன்ற சூழலில் 10 கிலோ அவரைக்காயைப் பயன்படுத்தி முதலமைச்சரின் திருவுருவப்படத்தை அழகாக வரைந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ, பாராட்டை பெற்றுள்ளார். இந்த ஓவியம் ஸ்டாலினின் தலைமைத்துவ குணங்கள், மக்கள் நலப் பணிகள், திமுகவின் சமூக நீதி கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஓவியத்தின் அளவு சுமார் 3 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டுள்ளது.
இதுகுறித்து ஹரிஷ் பாபு கூறுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்கிறார். அவரது பிறந்தநாளில் இந்த ஓவியத்தை அளிக்கும் மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது. இனி இதை முதல்வரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளேன்" என்றார்.