திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு கார் - CAR FIRE ACCIDENT
🎬 Watch Now: Feature Video

Published : January 5, 2026 at 2:48 PM IST
சென்னை: சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் சாலையில் ஓடிக் கொண்டிருந்த சொகுசு காரின் முன்பகுதி மற்றும் அடிப்பகுதியில் திடீரென தீப்பற்றி புகை கிளம்பியுள்ளது. காரில் தீப்பிடித்ததை பார்த்து, சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் அருகே இருந்த கடைக் காரர்கள் விரைந்து வந்து காரில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, கடைகளில் இருந்த குழாயில் பைப்பை இணைத்து, அதன் மூலம் தண்ணீரை பாய்ச்சி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், கட்டுக்குள் வராத தீ பரவத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அவ்வழியாக வந்த ஒரு தண்ணீர் லாரியை மடக்கிய பொதுமக்கள், அதிலிருந்த தண்ணீரை குழாய் மூலம் பீச்சி அடித்து தீயை அணைத்தனர். பொதுமக்களின் இந்த துரித செயலால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்த போது, பொதுமக்கள் உதவிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.