'எஸ்கியூஸ்மி யாராவது இருக்கீங்களா'... உணவு தேடி வீட்டுக்குள் புகுந்த கரடி - NILGIRIS BEAR
🎬 Watch Now: Feature Video

Published : February 28, 2026 at 4:41 PM IST
நீலகிரி: உணவு தேடி சுற்றித் திரிந்த கரடி, திறந்திருந்த வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வாழும் கரடி, புலி, யானை, சிறுத்தை போன்ற விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது வழக்கமாகி வருகிறது. இதனால் பொதுமக்களும் பீதியில் உள்ளனர்.
இந்நிலையில், உதகையில் ரோகிணி திரையரங்கம் எதிர்புறத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் பங்களாவுக்கு செல்லும் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு கரடி ஒன்று புகுந்துள்ளது. உணவு தேடி அலைந்த கரடி, திறந்திருந்த வீட்டிற்குள் மெதுவாக நுழைந்துள்ளது.
வாசல் வழியாக உள்ளே நுழைந்த கரடி, வீட்டின் முன்பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. அதனைக் கண்டு பதறிய வீட்டின் உரிமையாளர், உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவல் தீயாய் பரவியதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் திறந்திருந்த வீட்டிற்குள் கரடி புகுந்த வீடியோ வெளியாக இணையத்தில் பரவி வருகிறது. அதில், வீட்டுக்குள் புகுந்த கரடி சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அங்கிருந்த உணவுப் பொருட்கள் மற்றும் பாத்திரங்களை கலைத்து போட்டு அங்கிருந்து சென்றது.