பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: கோட் சூட்டுடன் வந்த முதலமைச்சர் விஜய் - 17TH ASSEMBLY 1ST SESSION
🎬 Watch Now: Feature Video

Published : May 11, 2026 at 9:40 AM IST
சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடி, நடைபெற்று வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகமானது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது.
நேற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பதவியேற்ற நிலையில், அவருடன் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை (மே 10) தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டார். தவெக ஆட்சியின் முதல் சட்டப்பேரவை இன்று கூடுகிற நிலையில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட புதிய தவெக எம்எல்ஏக்களும், திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் எம்எல்ஏக்களும் பதவிப் பிரமாணம் ஏற்று வருகின்றனர்.
தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க, மே 13ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று கூடுகிற சட்டப்பேரவையானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நாளை (மே12) நடைபெற உள்ள நிலையில், நாளைய தினமே தமிழக முதலமைச்சர் விஜய் பெரும்பான்மையை நிருபிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழு, எஸ்.பி வேலுமணி தலைமையில் மற்றொரு குழு என இரண்டு குழுக்களாக வருகைப் புரிந்த நிலையில் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.