தியாகராஜரின் 179 வது ஆராதனை விழா - SADGURU THYAGARAJA

🎬 Watch Now: Feature Video

thumbnail
தியாகராஜரின் 179 வது ஆராதனை விழா (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 7:16 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: தியாகராஜரின் 179 வது ஆராதனை விழாவில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.  

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், திருவாரூரில் பிறந்து திருவையாற்றில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் 1847 ஆண்டில் முக்தி அடைந்தவர். அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள் கர்நாடக சங்கீத உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி கர்நாடக இசைப் பிரியர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே கர்நாடக இசைப்பிரியர்களால் இவர் ஆராதிக்கப்பட்டு வருகிறார். 

தியாகராஜரை நினைவு கூறும் வகையில் திருவையாற்றில் ஸ்ரீதியாகபிரம்ம சபா சார்பில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டு தியாகராஜரின் 179 வது ஆராதனை விழா கடந்த 3-ந் தேதி தொடங்கி தினமும் பல்வேறு இசைக் கலைஞர்களின் இசைக் கச்சேரி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி செலுத்தும் விழா இன்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 1000-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள், இசை ரசிகர்கள் ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளான ஸ்ரீராகங்களை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். 

ABOUT THE AUTHOR

...view details