மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம் - SRI JALAKANDEESWARAR TEMPLE

🎬 Watch Now: Feature Video

thumbnail
மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 16, 2026 at 10:45 AM IST

1 Min Read
Choose ETV Bharat

வேலூர்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம் பூஜை சிறப்பாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்குகளை கொண்டு சிறப்பு யாகமும், 1008 சங்காபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.

இதற்காக, பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் 1008 சங்குகளில் நிரப்பப்பட்டது. அவை யாக சாலையில் வைத்து வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து பூர்ணாஹுதி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க, 1008 சங்குகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, ஸ்ரீ ஜலகண்டீஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்று பக்தர்கள் அருள் பெற்றனர். மஹா சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு திரண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

இது குறித்து கோயிலுக்கு வந்த பக்தர் சண்முகசுந்தரம் கூறுகையில், "ஆலயத்தில் நடைபெற்ற 1008 சங்காபிஷேகத்தை காண மிகவும் ஆனந்தமாக இருந்தது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற யாகமும், பின்னர் சங்குகளால் செய்யப்பட்ட அபிஷேகமும் மனதை நெகிழச்செய்தது. இந்த ஆண்டு எனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தது மிகுந்த ஆன்மிக திருப்தியை அளித்துள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details