ETV Bharat / technology

ஹீரோ விடா விஎக்ஸ் 2 ஸ்கூட்டர் சிறப்பு பதிப்பு... விலை, சிறப்பம்சங்கள் என்ன?

இந்த சிறப்பு பதிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தொடர்ந்து இதே ஸ்டைலை பிரதிப்பலிக்க கூடிய தலைக் கவசத்தையும் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விடா விஎக்ஸ்2 கேகேஆர் எடிசன்
விடா விஎக்ஸ்2 கேகேஆர் எடிசன் (Image Credit: YouTube/Vida World)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 26, 2026 at 4:36 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: விடா விஎக்ஸ் 2 நைட் எடிசன் எனும் சிறப்பு பதிப்பை ஹீரோ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மின்சார வாகன (EV) உற்பத்தி பிரிவான விடா (Vida) அதன் விஎக்ஸ்2 (VX2) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் நைட் எடிஷன் எனும் சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சிறப்பு பதிப்பு ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸை பிரதிபலிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற நைட்ஸ் அன்பிளக்கட் 3.0 எனும் நிகழ்ச்சியில் இந்த சிறப்பு பதிப்பு மின்சார ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுக விழாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக, அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே, துணை கேப்டன் ரிங்கு சிங் மற்றும் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு பதிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தொடர்ந்து இதே ஸ்டைலை பிரதிப்பலிக்கக் கூடிய தலைக் கவசத்தையும் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய விடா விஎக்ஸ்2 நைட் எடிஷன் அறிமுக விலையாக ரூ. 1.16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது புதுடெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளை, வழக்கமான விடா விஎக்ஸ்2 பிளஸ் வேரியண்டை காட்டிலும் இது ரூ. 21 ஆயிரம் அதிகம் ஆகும்.

இந்த ஸ்கூட்டருக்கு பிஎம்-இ டிரைவ் திட்டத்தின்கீழ் மானியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. விடா விஎக்ஸ்2 நைட் எடிஷன் ஓர் சிறப்பு பதிப்பு என்பதால், அது குறைவான எண்ணிக்கையில் விற்பனைக்கு வருகிறது. ஆனால், எத்தனை ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வரும் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க: முடங்கியது எக்ஸ் தளம்: திடீரென புரொஃபைல்களில் இருந்து மாயமான பதிவுகள்

விடா விஎக்ஸ்2 கேகேஆர் எடிஷனின் சிறப்புகள்

வழக்கமான விடா விஎக்ஸ்2-வை விட இது பன்மடங்கு மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, கேகேஆர் அணியை பிரதிபலிக்கக் கூடிய நைட் பர்பிள் மற்றும் தங்க நிறத்தால் இந்த சிறப்பு பதிப்பு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, ஸ்கூட்டரின் முகப்பு பகுதியில் நைட் ரைடர்ஸ் அணியின் எம்பளமும் இடம் பெற்றிருக்கின்றது. இது போன்று இன்னும் சில கணிசமான சிறப்புகளை இது பெற்றிருக்கிறது.

விடா விஎக்ஸ்2 கேகேஆர் எடிஷனின் சிறப்பம்சங்கள்

4.3 அங்குல டிஎஃப்டி திரை, செல்போன் சார்ஜிங் பாயிண்ட், எல்இடி மின் விளக்குகள், ஓடிஏ இணைப்பு வசதி, சிபிஎஸ் மற்றும் 18 சாய்வான சாலைகளிலும் ஏறும் திறன் உள்ளிட்ட வசதிகளை அது பெற்றிருக்கின்றது. இத்துடன், ஈகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் ஆகிய ரைடிங் மோட்களும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

முழு சார்ஜில் எவ்வளவு தூரம் பயணிக்கலாம்?

விடா விஎக்ஸ்2 கேகேஆர் எடிஷனில் இரண்டு கழட்டி மாட்டும் வசதி கொண்ட பேட்டரிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இரண்டும் சேர்ந்து 3.4kWh மின்திறனை வழங்கும். இதை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் அதிகபட்சமாக 142 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் 39 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.

மின்சார மோட்டாரை பொருத்த வரை இதில் 8.04 பிஎச்பி ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட பிஎம்எஸ்எம் (நிரந்தர காந்த ஒத்திசைவு மின் மோட்டார்) வகையை சேர்ந்த மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ என்று ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது.