ETV Bharat / technology

ரூ.13,999க்கு 7,000 mAh பேட்டரியுடன் ஸ்மார்ட்ஃபோனா? ஓப்போ ஏ6சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர் ஓஎஸ் (ColorOS 15)-இல் இயங்குகிறது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.

ஓப்போ ஏ6சி இந்தியாவில் அறிமுகம்
ஓப்போ ஏ6சி இந்தியாவில் அறிமுகம் (Oppo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2026 at 8:23 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: பிரபல ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ (OPPO), இந்தியாவில் அதன் புதிய ஏ6சி (A6c) மாடல் ஃபோனை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. இரண்டு வேரியண்டுகளில் இந்த செல்ஃபோன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும்.

விலை எவ்வளவு, எங்கு விற்பனைக்குக் கிடைக்கும்?

ஓப்போ ஏ6சி இந்தியாவில் இரண்டு விதமான ரேம் (RAM) மற்றும் ஸ்டோரேஜ் (Storage) ஆப்ஷன்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒன்று 4ஜிபி ரேம் (4GB RAM) மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் (64 GB storage)-லும், மற்றொன்று 4 ஜிபி ரேம் (4GB RAM) மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் (128 GB storage)-லும் கிடைக்கும்.

இதில் குறைவான (64 ஜிபி) ஸ்டோரேஜைக் கொண்டிருக்கும் வேரியண்டுக்கு ரூ. 13,999-ம், அதிக (128 ஜிபி) ஸ்டோரேஜை கொண்டுள்ள வேரியண்ட் ரூ. 16,999-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ஓப்போ-வின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்திலேயே புதிய ஏ6சி ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக மையங்களில் விற்பனைக்கு வருவது குறித்த எந்த அறிவிப்பையும் இப்போது ஓப்போ வெளியிடவில்லை.

ஓப்போ ஏ6சி ஸ்மார்ட்ஃபோனின் சிறப்புகள்

166.48 மிமீ நீளம், 78.23 மிமீ அகலம் மற்றும் 8.95 மிமீ அடர்த்தியைக் கொண்டதாக இந்த புதிய ஃபோனை ஓப்போ தயாரித்துள்ளது. ஆகையால், சற்றே பெரியதாக இருந்தாலும், அது கைகளுக்கு அடக்கமான, ஸ்டைலிஷான ஃபோனாகவே இருக்கும் என தெரிகின்றது.

இதேபோல், இந்த ஃபோனில் செல்போன் பிரியர்களைக் கவரும் நோக்கில் 6.75 அங்குல எச்டி பிளஸ் (HD+) வகை எல்சிடி திரையை ஓப்போ வழங்கி உள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டிங் பெற்ற திரை ஆகும். இந்த 900 நைட்ஸ் பிரைட்னஸ், 8 பிட் வண்ணம், 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி ஆகிய சப்போர்ட்டுகளை கொண்டது என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்த திரையின் வாயிலாக படங்கள் அல்லது காட்சிகளைப் பார்க்கும்போது அது கவர்ச்சிகரமானதாக இருக்கும் என தெரிகின்றது.

இத்துடன், சிறந்த பயன்பாட்டிற்காக இந்த செல்ஃபோனில் ஆக்டா-கோர் யுனிசெக் டி7250 புராசஸர், மாலி-ஜி57, 850 மெகாஹெர்ட்ஸ் (MHz) கிராபிக்ஸ் கார்டு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்களைப் பெற்றிருப்பதன் வாயிலாக தினசரி பயன்பாட்டிற்கு உகந்த செல்ஃபோன் ஓப்போ ஏ6சி என்பது தெரிய வந்துள்ளது.

இத்துடன், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் இந்த செல்ஃபோனில் அதிக திறன் கொண்ட கேமிராக்களை ஓப்போ வழங்கி உள்ளது. அந்த வகையில், பின்பக்கத்தில் எஃப்/2.2 லென்ஸ் மற்றும் 81 டிகிரி அளவில் இடத்தைக் கவரும் வசதிக்கொண்ட 13 மெகா பிக்சல் கேமிராவும், முன்பக்கத்தில் எஃப்/2.2 லென்ஸ் மற்றும் 81 டிகிரி அளவில் இடத்தைக் கவரும் வசதி கொண்ட 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமிராவும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெற்றிகரமாக ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் - தடைகளை கடந்து சென்ற 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள்

இவை அனைத்தையும்விட மிக முக்கியமானதாக 7,000 mAh திறன் கொண்ட பேட்டரி இந்த செல்ஃபோனில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வசதியும் இந்த செல்ஃபோனில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இந்த செல்ஃபோனை பயன்படுத்தி வேறு சாதனங்களையும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.

இவற்றுடன், வை-ஃபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு வசதிகளையும் இந்த செல்ஃபோனில் ஓப்போ வழங்கியுள்ளது. மேலும், ஐபி64 ரேட்டிங் பெற்ற செல்ஃபோனாகவும் இது உள்ளது. ஆகையால், தண்ணீர் அல்லது தூசி உள்ளிட்டவற்றால் இது எந்த பாதிப்பையும் சந்திக்காது. மேலும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர் ஓஎஸ் (ColorOS 15)-இல் இயங்குகிறது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.