'லாவா போல்டு என்2 5ஜி' இந்தியாவில் அறிமுகம்; சலுகை விலையில் விற்பனை செய்ய போறாங்க மக்களே!
இந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு வீடு தேடி வந்து சர்வீஸ் செய்யும் சிறப்பு சேவையை வழங்க இருப்பதாக லாவா நிறுவனம் தெரிவித்து உள்ளது.


Published : June 3, 2026 at 7:30 PM IST
ஹைதராபாத்: லாவா நிறுவனம் போல்டு என்2 5ஜி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அறிமுகத்தை முன்னிட்டு இந்த ஸ்மார்ட்ஃபோனை சலுகை விலையில் விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மலிவு விலையில் ஸ்மார்ட்ஃபோன்களை விற்பனைச் செய்து வரும் லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனம், அதன் விலை குறைவான ஸ்மார்ட்ஃபோன்களின் வரிசையை விரிவுப்படுத்தி உள்ளது. அது புதிய போல்டு என்2 5ஜி (Lava Bold N2 5G) மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
120 ஹெர்ட்ஸ் எச்டி பிளஸ் திரை (120Hz HD+ Display), யுனிசெக் டி8200 புராசஸ்ஸர் (Unisoc T8200 SoC), 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 13 மெகாபிக்சல் பின் பக்க கேமிரா, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிக் கொண்ட 6000 எம்ஏஎச் பேட்டரி ஆகிய அட்டகாசமான வசதிகளை இந்த ஸ்மார்ட்ஃபோன் கொண்டுள்ளது. மேலும், ஆன்ட்ராய்டு 16 இயங்குதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும்.
விலை எவ்வளவு மற்றும் எங்கு விற்பனைக்கு கிடைக்கிறது?
இந்தியாவில் ஏற்கெனவே லாவா போல்டு நிறுவனம் 'என்' சீரிஸின்கீழ் என்1 5ஜி (Bold N1 5G) மற்றும் என்1 ப்ரோ (Bold N1 Pro) ஆகிய இரு மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகிறது. இவற்றின் வரிசையிலேயே புதிய வரவாக போல்டு என்2 5ஜி தற்போது இணைந்துள்ளது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 11,999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சிறப்பு சலுகை விலை ஆகும். சலுகை இல்லாமல் ரூ. 12,999-க்கு இந்த செல்ஃபோன் விற்கப்பட உள்ளது. வருகின்ற ஜூன் 9 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கே இந்த ஸ்மார்ட்ஃபோனின் விற்பனை இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது. அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் இதை வாடிக்கையாளர்களால் வாங்கிக் கொள்ள முடியும்.
லாவா போல்டு என்2 5ஜி-இன் சிறப்பம்சங்கள்
பட்ஜெட் விலைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ள இந்த ஸ்மார்ட்போனில் ஏகப்பட்ட சிறப்பம்சங்களை லாவா நிறுவனம் வழங்கி உள்ளது. அந்தவகையில், முக்கிய அம்சமாக 6.75 அங்குலத்தில் 120 ஹெர்ட்ஸ் எச்டி பிளஸ் திரை வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், தடையில்லா செயல்பாட்டிற்காக இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் 6nm யுனிசோக் டி8200 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜும் வழங்கப்பட்டு உள்ளது.
It’s time you upgrade to the most no BS phone ever. The all new Bold N2 5G is here!
— Lava Mobiles (@LavaMobile) June 3, 2026
Special Launch Price: ₹11,999*
Sale Starts: 9th June, 12PM
Notify Me: https://t.co/JIE78HnJgz
*Valid only on Day 1#NoBullshit #NoBloatware #LavaMobiles #Amazon pic.twitter.com/JjQUpGrnRX
| இதையும் படிங்க: விஜய் அண்ணா எங்களுக்கு தாய்மாமன் சீர் வேண்டாம் டாஸ்மாக் கடையை மூடினால் போதும்; பெண்கள் வைத்த 'சபாஷ்' கோரிக்கை |
மேலும், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய 13 மெகாபிக்சல் கேமிரா செல்போனின் பின் பக்கத்திலும், வீடியோ கால் மற்றும் செல்ஃபி எடுக்கும் விதமாக 5 மெகாபிக்சல் கேமிரா செல்போனின் முன் பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக ஐபி64 ரேட்டிங் இந்த செல்போன் பெற்றுள்ளது. ஆகையால், தண்ணீர் மற்றும் தூசால் இந்த செல்போன் பாதிப்படையாது என தெரிகிறது.
இத்துடன், 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிக்கொண்ட 6000 எம்ஏஎச் பேட்டரி லாவா போல்டு என்2 5ஜி-இல் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பாக, இந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு வீடு தேடி வந்து சர்வீஸ் செய்யும் சிறப்பு சேவையை வழங்க இருப்பதாகவும் லாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

