ETV Bharat / technology

பாடலை விடுங்க; 1,100 கிமீ மைலேஜ் தரும் எம்ஜி ஹெக்டர் தோமாஹாக் காரில் ‘ஈடிவி பாரத்’ செய்தியை கேட்டுட்டே பயணம் செய்யலாம்!

எம்ஜி தோமாஹாக் எலெக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் ஆகிய ஆப்ஷன்களுடன் சேர்த்து 5 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் ஆகிய தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

எம்ஜி ஹெக்டர் தோமாஹாக்
எம்ஜி ஹெக்டர் தோமாஹாக் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 26, 2026 at 4:39 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: இந்தியாவிலேயே முதல் முறையாக ஈடிவி பாரத் செய்தியை ஒலியாக கேட்கும் வசதியுடன் எம்ஜி ஹெக்டர் தோமாஹாக் கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

எம்ஜி (MG) நிறுவனம் ஹெக்டர் தோமாஹாக் (Hector Tomahawk) எனும் புதுமுக கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதனை எலெக்ட்ரிக் (EV) மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் (Plug-in Hybrid) ஆகிய இரு அவதாரங்களிலும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது, எம்ஜி.

மேலும், தனது புத்தம் புதிய அடாப்ட் (ADAPT-Advanced Drive Architecture Platform Technology) ஆர்கிடெக்சரை பயன்படுத்தியே இந்த காரை எம்ஜி தயார் செய்துள்ளது. இந்த ஆர்கிடெக்சரை தழுவி உருவாக்கப்படும் முதல் கார் மாடல் இதுவே ஆகும்.

எம்ஜி தோமாஹாக் இவி
எம்ஜி தோமாஹாக் இவி (ETV Bharat)

அத்துடன், உலக சந்தையில் உலிங் (Wuling) நிறுவனத்தின்கீழ் ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் ஸ்டார்லைட் 560 (Starlight 560) மற்றும் எகிசன் (Eksion) ஆகிய கார்களில் பயன்படுத்தப்படும் பவர்டிரெயினையே இந்த காரில் எம்ஜி வழங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் தோமாஹாக் கார் வெளியீடு செய்யப்பட்ட நிலையில் இன்று அதனை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்து எம்ஜி அதிரடி காட்டியுள்ளது.

எம்ஜி காரில் ஒலிக்கும் ஈடிவி பாரத் செய்திகள்

அத்துடன், இந்த காரில் 'ஈடிவி பாரத்' செய்திகளை குரல் ஒலியாக கேட்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இன்பில்ட்டாகவே வரும் இந்த செயலியின் வாயிலாக 13 மொழிகள் வாயிலாக செய்திகளை கேட்டு அறிந்துக் கொள்ள முடியும். இத்தகைய வசதியைப் பெறும் இந்தியாவின் முதல் கார் மாடல் இதுவே ஆகும்.

ஈடிவி பாரத் செயலி
ஈடிவி பாரத் செயலி (ETV Bharat)

விலை விபரம்:

எம்ஜி தோமாஹாக் எலெக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் ஆகிய ஆப்ஷன்களுடன் சேர்த்து 5 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் ஆகிய தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கு அறிமுகமாக ரூ. 19.49 லட்சம் என்கிற ஆரம்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேசமயம், தோமாஹாக் உயர்நிலை தேர்வுக்கு ரூ. 27.79 லட்சம் என்கிற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

எம்ஜி ஹெக்டர் தோமாஹாக்
எம்ஜி ஹெக்டர் தோமாஹாக் (ETV Bharat)

அதேசமயம் இக்காரை பேட்டரி சேவை (Battery-as-a-Service) திட்டத்தின் கீழாகவும் வாங்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தின் கீழ் ரூ. 13.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே தோமாஹாக் காரை வாங்கிக் கொள்ள முடியும். இதன் வாயிலாக ரூ. 5.5 லட்சம் வரை பணத்தை மிச்சப்படுத்திக்க முடியும்.

மின்சார வெர்ஷனை மட்டுமல்ல பிளக்-இன் ஹைபிரிட் வெர்ஷனையும் பேட்டரி சேவை திட்டத்தின்கீழ் எம்ஜி விற்பனைக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின்கீழ் தோமாஹாக் காரை வாங்கும்போது ரூ. 3.9 லட்சம் வரை மிச்சப்படுத்த முடியும். அதேசமயம், பேட்டரிக்கான பயன்பாட்டு கட்டணமாக ஒவ்வொரு கிமீ பயணத்துக்கும் மின்சார தேர்வுக்கு ரூ. 4.9ம், பிளக்-இன் ஹைபிரிட் தேர்வுக்கு ரூ. 3.2ம் செலுத்த வேண்டும்.

பவர்டிரெயின்தேர்வுகள் விபரம்விலை விபரம் (எக்ஸ்-ஷோரூம்)
எலெக்ட்ரிக்எக்ஸைட் (7 சீட்டர்)ரூ. 19,49,800
எக்ஸ்க்ளூசீவ் (7 சீட்டர்)ரூ. 21,99,800
எஸ்சென்ஸ் (7 சீட்டர்)ரூ. 23,49,800
எஸ்சென்ஸ் (5 சீட்டர்)ரூ. 22,99,800
பிளக்-இன் ஹைபிரிட்எக்ஸ்க்ளூசீவ் (7 சீட்டர்)ரூ. 25,69,800
எஸ்சென்ஸ் (7 சீட்டர்)ரூ. 27,79,800

மோட்டார், பேட்டரி மற்றும் ரேஞ்ச் விபரம்

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் தோமாஹாக் மின்சார காரில் 69.2 kWh எல்எஃப்பி வகை பேட்டரி பேக்கையே வழங்கியிருக்கிறது. இந்த பேட்டரி பேக்கை மேஜிக் பேட்டரி என்கிற பெயரில் எம்ஜி குறிப்பிடுகிறது. இந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 517 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இந்த காரை 90 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் முதல் 7.4 kW AC வீட்டு சார்ஜிங் வாயிலாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். தொடர்ந்து, 150 kW மற்றும் 310 என்எம் டார்க் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இது முன் வீல்களுக்கு இயக்கும் திறனை வழங்கும்.

எம்ஜி தோமாஹாக் பிளக்-இன் ஹைபிரிட்
எம்ஜி தோமாஹாக் பிளக்-இன் ஹைபிரிட் (ETV Bharat)

இதேபோல், இதன் பிளக்-இன் ஹைபிரிட் வெர்ஷனில் 20.5 kWh பேட்டரி பேக், 148 kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. எனவே இந்த காரை முழு எலெக்ட்ரிக் காராக அல்லது பெட்ரோல் வாகனமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

முழு எலெக்ட்ரிக் காராக பயன்படுத்தும்போது ஃபுல் சார்ஜில் 115 கிமீ தூரம் வரை ஹெக்டர் தோமாஹாக் பிளக்-இன் ஹைபிரிட் காரில் பயணிக்க முடியும். அதேநேரத்தில், முழு சார்ஜ் மற்றும் ஃபுல் டேங்க் பெட்ரோலில் 1,100 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும். அதாவது, லிட்டர் ஒன்றுக்கு இந்த கார் 22 கிமீ வரை மைலேஜ் தரும்.

ஹெக்டர் தோமாஹாக் எஸ்யூவி காரின் சிறப்பம்சங்கள்

எம்ஜி நிறுவனம் இந்த காரை அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய வாகனமாக தயார் செய்திருக்கின்றது. அந்த வகையில், அடாஸ் லெவல் 2 இக்காரில் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், நடுவரிசை இருக்கைக்கும் ஹெட்ரெஸ்ட், காற்றோட்டம் மற்றும் சூடாகும் வசதிக் கொண்ட இருக்கைகள், ஆம்பியன்ட் லைட், 15 அங்குல தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் திரை, 8 அங்குல டிரைவருக்கான திரை உள்ளிட்டவற்றை எம்ஜி இந்த புதுமுக காரில் வழங்கி உள்ளது.