ETV Bharat / technology

மறுபிறவி எடுத்த டாடா சியராவின் விலை தெரியுமா? பட்டியலில் இன்னும் சேராத அக்கம்பிளிஷ்டு மாடல்!

ஹூண்டேய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசூகி விக்டோரிஸ், கிராண்ட் விடாரா, டொயோட்டா ஹைரைடர் போன்று இந்திய சாலைகளில் உலாவி வரும் எஸ்யூவி கார்களுடன் புதிய டாடா சியரா நேரடி போட்டியை சந்திக்கிறது.

புதிய டாடா சியராவின் மஞ்சள் நிற வகை
புதிய டாடா சியராவின் மஞ்சள் நிற வகை (Tata Motors)
author img

By ETV Bharat Tech Team

Published : December 9, 2025 at 1:45 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: புதிய டாடா சியரா எஸ்யூவி காரின் ஸ்மார்ட், ப்யூர், அட்வெஞ்சர் வகைகளின் விலைப்பட்டியலை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

90’ஸ்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த டாடா சியரா காரின் உற்பத்தி 2003-இல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய பரிமாணம் எடுத்துள்ள டாடா சியரா, அனைவரையும் வசீகரிக்கும் புதிய தோற்றத்துடன் கடந்த நவம்பர் 25-அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்த காரை, ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்து டாடா நிறுவனம் ஆச்சரியம் அளித்துள்ளது.

முதலில், சியரா கார் தொடர்பான தகவல்கள் மட்டுமே வெளியிட்டிருந்த டாடா, இப்போது கார் மாடல்களின் விலைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, சியரா கார் ரூ.11.49 லட்சம் முதல் 18.49 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்று தெரியவந்துள்ளது.

எனினும், டாடா நிறுவன கார்களின் டாப் வகைகளான அக்கம்பிளிஷ்டு, அக்கம்பிளிஷ்டு+ வேரியண்டுகளும் சியராவில் வழங்கப்படும் நிலையில், அதன் விலை விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடாமல் இருக்கிறது.

இந்திய சாலைகளில் உலாவி வரும் ஹூண்டேய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசூகி விக்டோரிஸ், கிராண்ட் விடாரா, டொயோட்டா ஹைரைடர், வால்க்ஸ்வேகன் டாய்குன், ஸ்கோடா குஷாக் போன்ற எஸ்யூவி கார்களுடன் புதிய டாடா சியரா நேரடி போட்டியை சந்திக்க தயாராகி உள்ளது.

டாடா சியாரா விலை பட்டியல்

புதிய டாடா சியாரா மொத்தம் 7 மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது - அவை ஸ்மார்ட் பிளஸ், ப்யூர், ப்யூர் பிளஸ், அட்வெஞ்சர், அட்வெஞ்சர் பிளஸ், அக்கம்பிளிஷ்டு, அக்கம்பிளிஷ்டு+ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய டாடாs சியராவின் விலை பட்டியல் வெளியானது.
புதிய டாடாs சியராவின் விலை பட்டியல் வெளியானது. (Tata Motors)

இதில், ஸ்மார்ட் பிளஸ் மாடல் ரூ.11.49 லட்சத்தில் தொடங்கி, அட்வெஞ்சர் பிளஸ் விலை ரூ.18.49 எனும் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இதன் போட்டியாளரான ஹூண்டேய் கிரெட்டா, ரூ.10.7 லட்சத்தில் தொடங்கி, அதன் டாப் மாடல் 20.2 லட்ச ரூபாய் எனும் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முறையே, கியா செல்டோஸ், 10.8 லட்ச ரூபாய் முதல் ரூ.19.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படை மாடல்களை, புதிய டாடா சியாரா-வின் தொடக்க வகையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டுக்கும் இடையே சுமார் ரூ.80,000 வித்தியாசம் வருகிறது.

புதிய டாடா சியராவின் டாஷ்போர்டு.
புதிய டாடா சியராவின் டாஷ்போர்டு. (Tata Motors)

ஆனால், இதையெல்லாம் தாண்டி, தன் அசரவைக்கும் தோற்றத்தாலும், திறன்வாய்ந்த எஞ்சினாலும் டாடா சியரா சந்தையில் தாக்குப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டாடா சியரா அம்சங்கள்

புதிய சியரா மூன்று எஞ்சின் விருப்பங்களுடன் வருகிறது. முதலாவதாக 118 HP பவர் (எச்.பி சக்தி) மற்றும் 280 Nm டார்க் (என்.எம் ஆற்றல்) கொண்ட 1.5 லிட்டர் கிரையோஜெட் டர்போ டீசல் எஞ்சின் இருக்கிறது.

புதிய டாடா சியரா காரின் பின்புற தோற்றம்.
புதிய டாடா சியரா காரின் பின்புற தோற்றம். (Tata Motors)
எஞ்சின்சக்தி (bhp)ஆற்றல் (Nm)கியர்பாக்ஸ்
1.5லி நேச்சிரலி ஆஸ்பிரேட்டட்
ரெவெட்ரான் பெட்ரோல்
104.55 bhp | 6,000 rpm145 Nm டார்க்6 ஸ்பீடு மேனுவல்
7 ஸ்பீடு டுயல் கிளட்ச்
1.5லி டிஜிடிஐ
ஹைப்பரியான் பெட்ரோல்
157.81 bhp | 5,000 rpm255 Nm டார்க்6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்
1.5லி கிரையோஜெட் டீசல் 116.38 bhp | 4,000 rpm60 Nm டார்க்6 ஸ்பீடு மேனுவல்
6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்
280 Nm டார்க் (ஏடி)

அடுத்ததாக, புதிதாக உருவாக்கப்பட்ட 106 எச்.பி சக்தி, 145 என்.எம் ஆற்றலுடன் வரும் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் எஞ்சின் மற்றும் 160 எச்.பி சக்தி, 260 என்.எம் ஆற்றல் கொண்ட 1.5 லிட்டர் ஹைப்பரியான் டர்போ பெட்ரோல் எஞ்சினும் சியரா சீறி பாய உத்வேகம் அளிக்கிறது. விரைவில் டாடா சியராவின் ஆல் வீல் டிரைவ் (AWD) மாடலையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தும் என்று உறுதி அளித்துள்ளது.

இதன் போட்டியாளரான ஹூண்டேய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவை ஒரே மாதிரியான எஞ்சின் விருப்பங்களை கொண்டுள்ளன. 160 எச்.பி சக்தி, 260 என்.எம் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின், 115 எச்.பி சக்தி, 144 என்.எம் ஆற்றல் கொண்ட 1.5 லிட்டர் டர்போ டீசல், 116 எச்பி சக்தி, 250 என்.எம் ஆற்றல் கொண்ட 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகியவை அதில் அடங்கும்.