ETV Bharat / technology

புதிய தயாரிப்புகளின் அறிமுகத்திற்கு நாள் குறித்த ஆப்பிள்; ஒருவேள அதுவா இருக்குமோ?

'ஆச்சரியமும், பிரகாசமும்' என்கிற தலைப்பில் இந்த அறிமுக நிகழ்வானது அரங்கேற இருக்கிறது.

ஆப்பிள் நிகழ்வு 2026 செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது
ஆப்பிள் நிகழ்வு 2026 செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது (Image Credits: ETV Bharat via Apple)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 27, 2026 at 6:22 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளை வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

செல்ஃபோன் பிரியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக ஆப்பிள் ஐஃபோன் 18 உள்ளது. இதேபோல், அந்நிறுவனம் விரைவில் தனது முதல் மடிக்கும் வசதிக் கொண்ட செல்போனையும் உலக சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், இதன் மீதான எதிர்பார்ப்பும் செல்போன் காதலர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது.

மடிக்கும் வசதிக் கொண்ட ஆப்பிள் ஐபோன்
மடிக்கும் வசதிக் கொண்ட ஆப்பிள் ஐபோன் (Image Credits: YouTube/ Front Page Tech)

இந்த மாதிரியான சூழலில் ஆப்பிள் நிறுவனம் அதன் புதுமுக தயாரிப்புகளின் அறிமுகத்துக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கலிஃபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரிலேயே அந்த ஆப்பிளின் புதுமுக தயாரிப்புகளின் அறிமுக விழா அரங்கேற உள்ளது.

'ஆச்சரியமும், பிரகாசமும்' என்கிற தலைப்பில் இந்த அறிமுக நிகழ்வானது அரங்கேற இருக்கிறது. மேலும், இந்த அறிமுக நிகழ்வை தனது அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பு செய்யவும் அது திட்டமிட்டுள்ளது. இதுதவிர நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவற்றிலும் நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

எந்த நேரத்தில் அறிமுக நிகழ்வு அரங்கேறும்?

செப்டம்பர் 9 அன்று இந்திய நேர நிலவரப்படி இரவு 9.30 மணி அளவில் ஆப்பிளின் இந்த அறிமுக நிகழ்வு அரங்கேற உள்ளது.

இந்த அறிமுக நிகழ்வில் என்ன எதிர்பார்க்கலாம்?

இப்போது கிடைத்திருக்கும் உறுதியற்ற தகவல்களின்படி, ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் ஃபோல்ட் (ஐபோன் அல்ட்ரா) இந்த செல்போன்களையே ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பது தெரிய வந்துள்ளது. இவை, தற்போது விற்பனையில் இருக்கும் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை காட்டிலும் கூடுதல் மேம்பாடுகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிகழ்வு 2026 செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது
ஆப்பிள் நிகழ்வு 2026 செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது (Image Credits: ETV Bharat via Apple)

மிக முக்கியமாக இந்த நிகழ்ச்சியின்போது மடிக்கும் வசதிக் கொண்ட ஐபோன் அல்ட்ரா அறிமுகம் செய்யப்படும் எனில், அதுவே அந்த நாளின் முக்கிய வெளியீடாக இருக்கும். ஏனெனில், ஆப்பிள் நிறுவனம் மிக அதிக சிறப்புகள் வாய்ந்த ஓர் மடிக்கும் வசதிக் கொண்ட செல்போனாக அதை தயாரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க: பாடலை விடுங்க; 1,100 கிமீ மைலேஜ் தரும் எம்ஜி ஹெக்டர் தோமாஹாக் காரில் ‘ஈடிவி பாரத்’ செய்தியை கேட்டுட்டே பயணம் செய்யலாம்!

குறிப்பாக, சந்தையில் தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற மடிக்கும் வசதிக் கொண்ட செல்போன்களைக் காட்டிலும் அதிக மேம்பட்டதாக இது இருக்கும் என கூறப்படுகிறது. பொதுவாக, மடிக்கும் வசதிக் கொண்ட செல்போன்களில் மடியக் கூடிய அந்த இடத்தில் கோடு போன்று இருக்கும். ஆனால், ஆப்பிளின் தயாரிப்பில் அத்தகைய குறைபாடு இருக்காது என கூறப்படுகிறது.

10 மில்லியன் யூனிட்டுகள் தயாரிக்க திட்டம்

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய இந்த செல்ஃபோனை ஆரம்பத்தில் 7 முதல் 8 மில்லியன் அலகுகள் மட்டுமே தயாரிக்க ஆப்பிள் திட்டமிட்டிருந்தது. ஆனால், இதை திருத்தி 2026 ஆம் ஆண்டில் சுமார் 10 மில்லியன் யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்த மாற்றத்தை ஆப்பிள் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.