AI திட்ட அனுமதி, 'இ-சேவை 2.0' மேம்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்புகள்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி திட்ட அனுமதி தளம் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published : August 5, 2026 at 2:49 PM IST
|Updated : August 5, 2026 at 10:38 PM IST
சென்னை: அனைத்து 'இ-சேவை மையங்களும்' 'இ-சேவை 2.0' ஆக மேம்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026- 2027- ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 5) தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் முதன்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து சுமார் 02.31 மணி நேரம் உரையாற்றினார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகளுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 'நம்ம அரசு' வாட்ஸ்ஆப் சாட்பாட் சேவைகள் விரிவாக்கம்
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027#CMJosephVijay | #TNDIPR | #TNBudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @MarieWilson_TVK | pic.twitter.com/2bUBZUY7AC
— TN DIPR (@TNDIPRNEWS) August 5, 2026
தகவல் தொழில்நுட்பத்துறை ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான ஏற்றுமதியை உருவாக்குவதுடன் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027#CMJosephVijay | #TNDIPR | #TNBudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @MarieWilson_TVK | pic.twitter.com/ACBLEsdsFl
— TN DIPR (@TNDIPRNEWS) August 5, 2026
'தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு' (TN AI Mission)- AI, குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் AVGC-XR உள்ளடக்கி சுகாதாரம், விவசாயம், கல்வி மற்றும் ஆளுமையில் கவனம் செலுத்தப்படும். அனைத்து இ-சேவை மையங்களும் 'இ-சேவை 2.0' ஆக மேம்படுத்தப்படும்; 'நம்ம அரசு' வாட்ஸ்அப் சாட்பாட் 76 சேவைகளிலிருந்து 275 சேவைகளாக விரிவாக்கம் செய்யப்படும்.
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027#CMJosephVijay | #TNDIPR | #TNBudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @MarieWilson_TVK | pic.twitter.com/cZ5bIiHSsc
— TN DIPR (@TNDIPRNEWS) August 5, 2026
| இதையும் படிங்க: 2026-2027ம் நிதியாண்டில் அரசின் வருவாய் ரூ. 3,50,027 கோடி - வருவாய் பற்றாக்குறை ரூ. 55,775 கோடி என மதிப்பீடு |
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு 398 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) திட்ட அனுமதி
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027#CMJosephVijay | #TNDIPR | #TNBudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @MarieWilson_TVK | pic.twitter.com/HzpzmOqqTK
— TN DIPR (@TNDIPRNEWS) August 5, 2026
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி திட்ட அனுமதி தளம் (Single Platform For Efficient Expedited Development - SPEED) அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் விரைவான வெளிப்படையான திட்ட அனுமதி வழங்கப்படும். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூபாய் 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு நகரம்
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027#CMJosephVijay | #TNDIPR | #TNBudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @MarieWilson_TVK | pic.twitter.com/RDlmHjgNPx
— TN DIPR (@TNDIPRNEWS) August 5, 2026
இந்தியாவின் முதல் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (AI) நகரம் உருவாக்கப்படும். செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், குறைக்கடத்தி சோதனை ஆய்வகம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்கான ஒருங்கிணைந்த மையம் உருவாக்கப்படும். சாத்தியக்கூறு ஆய்விற்காக ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

