ETV Bharat / state

உயிரை மாய்த்துக் கொண்ட 11-ஆம் வகுப்பு மாணவி: தலைமை ஆசிரியை மீது பாய்ந்த வழக்கு

பள்ளி தலைமை ஆசிரியையிடம் தாய் தவமணி, கைக்கூப்பி நின்றுக்கொண்டு பேசியுள்ளார். இதனை கவனித்த மாணவி நிஜந்தி, தனது தாயின் கைகளை கீழே போடுமாறு கூறி தட்டி விட்டுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 4:18 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மதுரை: உசிலம்பட்டியில் பிளஸ் 1 மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தவமணி. இவரது மகள் நிஜந்தி (16).தொட்டப்ப நாயக்கனூரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்த நிஜந்தி, பூச்சிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார். அப்பள்ளியில் முதல் குரூப் எடுத்து படித்து வந்த நிலையில், மாணவி நிஜந்திக்கு திடீரென நர்சிங் படிப்பில் சேர ஆர்வம் வந்துள்ளது.

இதனால் தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, நர்சிங் படிப்பில் சேர்த்துவிடுமாறு மாணவி நிஜந்தி கூறியதாக தெரிகிறது. மேலும், பள்ளிக்கு செல்லாமல் ஒருமாதக்காலம் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதையும் படிங்க: பிரியாணி பாத்திரத்தில் பெண் உடல் பாகம்: மணிப்பூரில் பதுங்கியிருந்த தம்பதி கைது

இதையடுத்து, மாணவியின் தாயார் தவமணி, தனது மகளை உசிலம்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பது குறித்து விசாரிப்பதற்காக அங்கு சென்றுள்ளார். உடன், மாணவி நிஜந்தியும் சென்றுள்ளார்.

அப்போது, பள்ளி தலைமை ஆசிரியையிடம் தாய் தவமணி, கைக்கூப்பி நின்றுக்கொண்டு பேசியுள்ளார். இதனை கவனித்த மாணவி நிஜந்தி, தனது தாயின் கைகளை கீழே போடுமாறு கூறி தட்டி விட்டுள்ளார்.

இதனைப் பார்த்த தலைமை ஆசிரியை விமலா, நிஜந்தி இவ்வாறு செய்தது குறித்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிஜந்தி, மறுநாள் ஆகஸ்ட் 25-ஆம் தேதி, தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட உசிலம்பட்டி போலீசார், பள்ளி தலைமை ஆசிரியை விமலா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.