ETV Bharat / state

மலைவாழ் மக்கள் வெளியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம்

வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து மலைக் கிராம மக்களும் பெருந்திரளாக இப்பயணத்தில் பங்கேற்று வருகின்றனர்.

2 நாள் தொடர் நடைபயணம் தொடங்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
2 நாள் தொடர் நடைபயணம் தொடங்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 4:31 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தேனி: நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராம மக்களை வெளியேற்றுவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் 2 நாள் தொடர் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி, தேனி மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்களை வனத்துறை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் 2 நாள் தொடர் நடைபயணம் இன்று (ஆகஸ்ட் 29) தொடங்கியுள்ளது.

வால்பாறை மலை கிராம பகுதியில் இருந்து தொடங்கிய இந்த நடைபயணம், நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் வழியாகச் சென்று கடமலைக்குண்டு பகுதியில் நிறைவடையவுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: அமைச்சர் நிர்மல் குமார் நிகழ்ச்சியில் 3-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - மீண்டும் வெடித்த சர்ச்சை

இந்த நடைபயணத்தில், வருசநாடு மற்றும் மேகமலைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும், வனத்துறையின் வெளியேற்ற நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும், இப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து மலைக் கிராம மக்களும் பெருந்திரளாக இப்பயணத்தில் பங்கேற்று வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, ஆண்டிபட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.