ETV Bharat / state

சட்டப் பேரவை தேர்தலுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்... என்னென்ன தெரியுமா?

ரேசன் கடைகளில் அரிசியைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்கள் பாக்கெட் செய்து விற்பனை செய்யப்படும் என்று தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

த.வெ.க. தலைவர் விஜய்
த.வெ.க. தலைவர் விஜய் (TVK LIVE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 4:42 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைந்தால், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக ரத்துச் செய்யப்படும் என தவெக. தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4,900 பேர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தவெக தலைவர் விஜய், ஆளும் திமுக அரசு மீது அடுக்கடுக்கான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார். அத்துடன், விவசாயிகளுக்கு முக்கியமான வாக்குறுதிகளையும் அறிவித்தார்.

வாக்குறுதிகள் என்னென்ன?

அப்போது பேசிய விஜய் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அவை வருமாறு:

  • தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கான உரத் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளப்படும்.
  • 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடனை முழுமையாக ரத்துச் செய்வதற்கும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை 50% வரை ரத்துச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்
  • இரண்டு ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியராக இல்லாதபட்சத்தில் அவர்களின் குழந்தைகளின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி முதல் அனைத்து வகை படிப்புகளுக்குமான முழு செலவையும் அரசே ஏற்கும்.
இதையும் படிங்க: நான் வேண்டுமா? ஸ்டாலின் சார் வேண்டுமா? விஜய் கேள்வி
  • விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக எந்த திட்டமாக இருந்தாலும், ஒன்றிய அரசின் நெருக்கடியே இருந்தாலும் அந்த திட்டத்தை உங்களது தவெக ஆட்சி முழுமையாக நிராகரிக்கும்.
  • கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படும். போதுமான நெல் கொள்முதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கோ மூட்டை ஏற்றி இறக்கவோ ஒரு பைசா கமிஷன் வாங்காமல் பார்த்துக் கொள்ளப்படும். அப்படி கமிஷன் வாங்குவது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 500 ரேசன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும். கிராமங்களிலும் எடையாளர் நியமிக்கப்படுவார். பெண் விற்பனையாளருக்கு பெண் எடையாளர், ஆண் விற்பனையாளருக்கு ஆண் எடையாளர் என்பது பின்பற்றப்படும்.
  • ரேசன் கடைகளில் அரிசியைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்கள் பாக்கெட் செய்து விற்பனை செய்யப்படும்.
  • மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உண்மையான உணர்வுப்பூர்வமான அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு தவெக கொடுக்கும்.
  • கல்வி, மருத்துவம், ரேசன், குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
  • குழந்தைகள், பெண்கள், இளைஞர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • அரசு வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி தனியார் வேலைவாய்ப்புகளுக்கான வழியையும், உத்தரவாதத்தையும் உருவாக்குவோம் என தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.