ETV Bharat / state

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை கொள்முதல் செய்யமாட்டோம் - வியாபாரிகள் எச்சரிக்கை

ஜி.எஸ்.டி வரியை தமிழ்நாடு அரசு முறைப்படுத்தவேண்டும் என்று பாட்டில் வியாபாரிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் கோப்புப்படம்
டாஸ்மாக் கோப்புப்படம் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 28, 2026 at 12:02 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: டாஸ்மாக் கடைகளில் இன்றுமுதல் காலி மதுபாட்டில்களை கொள்முதல் செய்யமாட்டோம் என தமிழ்நாடு பாட்டில் வியாபாரிகள் நல சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் பாட்டில் வியாபாரிகள் நல சங்கத்தினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பாட்டில் வியாபாரிகள் நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகளில் பயன்படுத்தப்படும் மது பாட்டில்களை கொள்முதல் செய்து, அவற்றை சுத்தம் செய்து மறு பயன்பாட்டிற்காக மதுபான ஆலைகளுக்கு விநியோயம் செய்யும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த தொழில் செய்வோர் மதுபான கடைகளில் இருந்து காலியான மது பாட்டில்களை கொள்முதல் செய்து, அதை சுத்தம் செய்து, மறு பயன்பாட்டிற்காக மது ஆலைகளுக்கு கொடுக்கும் போது அரசிற்கு 18% ஜி.எஸ்.டி வரி செலுத்துகிறார்கள். ஆனால், இதைப் பெற்றுக்கொள்ளும் மதுபான ஆலைகள் அதற்கான ஜி.எஸ்.டி வரியை முறையாக அரசிற்கு செலுத்தாமல் இருப்பதால், பாட்டில் வியாபாரிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே, மதுபான ஆலைகள் ஜி.எஸ்.டி. வரியை முறையாக செலுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, பாட்டில் வியாபாரம் செய்யும் தொழிலில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். கடந்த சில மாதங்களாக பாட்டில் வியாபாரம் செய்யும் தொழிலாளர்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்து பெண் இறப்பிற்கு மின் கசிவு தான் காரணம் - உடற்கூராய்வு அறிக்கையில் தகவல்

எனவே, பாட்டில் வியாபாரிகள் நல சங்கத்தின் இந்த நீண்ட கால கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக சரிசெய்ய முன்வரவேண்டும். இல்லையெனில், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு முதலீட்டாளர்களையும், அவர்களை நம்பியுள்ள 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி பாட்டில்களை கொள்முதல் செய்வதையும், அவற்றை சுத்தம் செய்தும், தரம் பிரித்தும் மது ஆலைகளுக்கு திருப்பி அனுப்பும் நடைமுறையையும் இன்று முதல் பாட்டில் வியாபாரிகள் நிறுத்துவிடுவோம்.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி மதுபான ஆலைகளில் உள்ள ஜி.எஸ்.டி வரி முறைகேட்டை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பது தான் பாட்டில் வியாபாரிகள் நல சங்கத்தின் கோரிக்கையாகும்” என்று தெரிவித்துள்ளார்.